அரசு மேல் நிலைப் பள்ளி-கோத்தகிரி

சமூக அறிவியல்

வகுப்பு-10

I சரியான விடையை தேர்வு செய்                                                                       1X10=10

1.     முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர் ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி.

2. எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கைக்கொண்டது?

அ) பிரிட்டன் ஆ) பிரான்ஸ் இ) ஜெர்மனி ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

3. லத்தீன் அமெரிக்காவுடன் 'நல்ல அண்டை வீட்டுக்காரன்' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

அ) ரூஸ்வெல்ட் ஆ) ட்ரூமன் இ) உட்ரோவில்சன் ஈ) ஐசனோவர்

4. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

அ) அமெரிக்கா அளித்த உதவி ஆ) நெப்போலியனின் படையெடுப்புகள்

இ) சைமன் பொலிவரின் பங்கேற்பு ஈ) பிரெஞ்சுப் புரட்சி

5. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

அ) 2500 கி.மீ ஆ) 2933 கி.மீ இ) 3214 கி.மீ ஈ) 2814 கி.மீ

6. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

அ) நர்மதா ஆ) கோதாவரி இ) கோசி ஈ) தாமோதர்

7. வானிலையியல் ஒரு __________ அறிவியலாகும்.

அ) வானிலை ஆ) சமூக இ) அரசியல் ஈ) மனித

8. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்

அ) சமவெப்ப கோடுகள் ஆ) சம மழைக்கோடுகள் இ) சம அழுத்தக் கோடுகள் ஈ) அட்சக் கோடுகள்

9. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

அ) ஒரு முறை  ஆ) இரு முறை இ) மூன்று முறை  ஈ) எப்பொழும் இல்லை

10. நாட்டு வருமானம் அளவிடுவது---------.

அ) பணத்தின் மொத்தமதிப்பு ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு.

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.                                                                       1X10=10

1.          பால்கனில் ___________________நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

2.          __________ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

3.          நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை_____________என அழைக்கப்பட்டது.

4.          போயர்கள் ________________என்றும் அழைக்கப்பட்டனர்.

5.          முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ___________ல் தோன்றியது.

III. பொருத்துக.

1. வடகிழக்குப் பருவக் காற்று               - தமிழ்

2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள்       - அக்டோபர்-டிசம்பர்

3. சாங்போ                                                           -கங்கை ஆற்றின் துணை ஆறு

4. யமுனை                                                           - பிரம்மபுத்ரா

5. செம்மொழி                                          - இமயமலைகள்

IV.குறுகிய விடை                                                                                               2X10=20

1.     மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

2.     பதுங்குக் குழிப்போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

3.     இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

4.     டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக.

5.     இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

6.     இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.

7.      இந்தியாவின் செம்மொழிகள் எவை?

8.     நிதி மசோதா என்றால் என்ன?

9.     இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் காரணிகள் யாவை?

10.   நாட்டு வருமானம்வரையறு.

V. விரிவான விடை (இரு வினா மட்டும்)                                                      2X5=10

1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி? (OR) அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக. (OR) இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.

2. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி. (OR) ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும். (OR) முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவகாதி.

 

 

Comments

Post a Comment