10th முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் பகுதி I

2 மதிப்பென் வினாக்கள்

1. சீனா-ஜப்பானிய போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பிடுவாய்?

(அ) சிறிய நாடான ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை 1894 ல் அறிவித்தது.

(ஆ) இப்போர் 1894 முதல் 1895 வரை நடைபொற்றது. ஜப்பான் இப்போரில் வெற்றி பெற்றது உலகை வியக்க செய்தது.

(இ) ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்துக்கொண்டது.

(ஈ) இதன் மூலம் ஆசியாவில் தன் வலிமையை ஜப்பான் மெய்பித்தது.

2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

                                இங்கிலாந்து

                                பிரான்ஸ்

                                ரஸ்யா

3. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

                        (அ)  இங்கிலாந்து - ஆரவாரமான நாட்டுப்பற்று

                        (ஆ)  பிரான்ஸ்    -    அதி தீவிரப்பற்று (Jingoism)

                        (இ)    ஜெர்மனி    -    வெறிகொண்ட நாட்டுப்பற்று (Kultur)

4. பதுங்கு குழிப்போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

    (அ) முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர் யுத்தி.

    (ஆ) எதிரிகளிடமிருந்து வீரர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இக்குழிகள் உதவியது.

    (இ) பபிரதானப் பதுங்குக் குழிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும்

    (ஈ) கடிதங்கள், உணவு, ஆயுதம், ஆணைகள் மற்றும் புதிய வீரர்கள் வந்து சேர்வதற்க்கு உத்வியது.

5. முஸ்தப்பா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

 (அ) துருக்கி மிண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்க்கு முக்கிய பங்கு வகித்தார்.

(ஆ) விடுதலை பெற்றுத்தந்தார்.

(இ) துருக்கியை நவினமையமாக்கினார்.

 (ஈ) நவின் துருக்கியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

(அ) சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை.

(ஆ) முதல் உலகப்போரில் வெற்றிபெற்ற நாடுகளின் அமைப்பாகவே ப.ச காணப்பட்டது.

(இ) கூட்டுப்பாதுகாப்பு எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்த முடியவில்லை.

(ஈ) சர்வதிகாரிகள்  ப்.ச ஆனைக்கு கட்டுப்படவில்லை.

   



Comments